கவின் கொலை வழக்கை சிபிசிஐடி நேர்மையுடன் விசாரிக்க வேண்டும் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!!
vck leader thirumavalavan speech about kavin murder case
சமீபத்தில் பிரபல ஐடி நிறுவனத்தின் ஊழியர் கவின் என்பவர் நெல்லையில் சுர்ஜித் என்பவரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-

நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?
சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அதேபோல் இவர்களும் கைது செய்யப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
vck leader thirumavalavan speech about kavin murder case