விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்..!!
vck leader thirumavalavan announce meeting
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அதாவது, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தீவிரமாகத் தொடங்கி விட்டன.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு நேற்று முகநூல் நேரலையில் உரையாற்றினார். அப்போது அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் 22ம் தேதி நடைபெறும் என்றுத் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் காலை அமர்வில் கட்சியின் மாவட்ட செயலாளர்களும், மதிய அமர்வில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றுத் தெரிவித்தார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் திருமாவளவன் தலைமையிலேயே நடைபெற உள்ளது.
தொடர்ந்து நேரலையில் பேசிய திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் தி.மு.க.வை மட்டுமே நம்பி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
vck leader thirumavalavan announce meeting