மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை.. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
Various medical tests for MK Stalin Doctors recommend taking rest
மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து வருகிறார். தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டதை தொடர்ந்து அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
இதையடுத்து 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரியில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொள்வார்' என முதல்-அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அதன் பின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர்3 நாட்கள் ஓய்வில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.
English Summary
Various medical tests for MK Stalin Doctors recommend taking rest