சென்னையில் இன்று முக்கிய பூங்காக்கள் மூடல்.. அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். 

இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான இன்று வண்டலூா் உயிரியல் பூங்காவும், கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று வியாழக்கிழமை மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி பூங்காக்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vandalur zoo and Guindy park today closed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->