காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன்.!! ரத்த தானம் செய்தோருக்கு வானதி பாராட்டு..!! 
                                    
                                    
                                   Vanadi praises the blood doners for orissa train accident
 
                                 
                               
                                
                                      
                                            ஓடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்தில் ரயிலில் பயணித்த 288 பேர் உயிரிழந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பாலாஷோர், மயூர்பஞ்ச், பர்தக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக கட்டாக் உள்ள மருத்துவமனைகளில்  ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 3000 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாக கடாடாக மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்து , ரத்தம் தேவை படுவோருக்கு ரத்ததானம் வழங்கி பெருந்துயரான காலத்தில் பேருதவி செய்து மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன்.!" என பாராட்டியுள்ளார்.
 
  
                                     
                                 
                   
                       English Summary
                       Vanadi praises the blood doners for orissa train accident