வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்! - Seithipunal
Seithipunal



சேலம், வாழப்பாடியில் இன்று காலை வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் இருந்து சேலம் நோக்கி சேலம்-சென்னை புறவழிச்சாலை இன்று காலை 7 மணி அளவில் பிக்கப் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது எதிரே வந்த பார்சல் லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் வேன் அப்பளம் போல் நறுக்கியது. 

இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் நசுங்கி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து காரணமாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Van Lorry collision accident 3 died


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->