ஒட்டன்சத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஒட்டன்சத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பைபாஸ் சாலையில் திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அதி வேகத்தில் சென்றது. அப்போது எதிரே வந்த பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

அதன்பிறகு விபத்தை ஏற்படுத்திய வேன் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே உள்ள சாலையில் புகுந்து பைக்கில் வந்த ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தறிகெட்டு ஓடிய வேன் அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்த போலீசார் வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Van collision accident in ottanchathiram near


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->