வால்பாறை பாலியல் விவகாரம் : 3 பேராசிரியர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!....கோவை மண்டல இணை இயக்குநர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீது காவல் நிலையயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெற ‘உள்ளக புகார் குழு’  அமைக்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியது.

மேலும் மாநில மகளிர் ஆணையம், கல்வி நிறுவனங்களில் மாணவிகளை நேரில் சந்தித்து பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, இதன் விளைவாக தற்போது மாணவிகள் தைரியமாக புகார்களை தெரிவிக்க முன்வருகின்றனர் என்றும், தங்களிடம் வரும் புகார்கள் மீது காவல்துறை உதவியுடன் நாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், கல்லூரிக் கல்வித் துறை கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, வால்பாறை மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ராஜபாண்டி, தற்காலிகப் பேராசிரியர்கள் சதீஷ், முரளிராஜ் மற்றும் ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  இந்த புகார் குறித்த விவகாரத்தை மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Valparai sexual The issue 4 people including 3 professors suspended Coimbatore Regional Joint Director order


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->