ஆளுநர்களின் அராஜக போக்கிற்கு பதிலடி! ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து வைகோ கருத்து! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பட்ட அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்

இந்த தீர்ப்பு குறித்து பேசிய வைகோ "உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிவாளனுக்கு தூக்கு என்று தேதி முடிவான பிறகு புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மாலானியை அழைத்து வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கம் தண்டனையிலிருந்து தடை வாங்கி கொடுத்தேன். 

ராஜீவ் காந்தி படுகொலையில் எந்த குற்றமும் செய்யாமல் தொடர்பு இல்லாதவர்களை 30 ஆண்டுகள் மரண இருளில் அடைத்து வாழ்க்கை அழிந்து விட்டது. சிறையில் வாடிய அனைவரின் 30 ஆண்டு கால வாழ்க்கை மீண்டும் வரப்போகிறதா? சாந்தன், முருகன், ரவிச்சந்திரன் ,ஜெயக்குமார், ராபர்ட், நளினி ஆகியோரின் விடுதலை ஓரளவுக்கு மனதிற்கு ஆறுதல் கொடுக்கிறது. 

இருந்தாலும் கூட அரசாங்கமே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததும் கூட மனசாட்சியற்ற மனிதாபிமானம் அற்ற முறையில் ஆளுநர் சட்டமன்றம் இயற்றிய தீர்மானங்களை குப்பைத்தொட்டியில் போட்டு வைத்திருந்தார். ஆளுநர்களின் அராஜக போக்கிற்கு கொடுத்த சரியான பதிலடியை உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko statement on acquittal of Rajiv Gandhi assassin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->