வைகோவை வேதனையில் ஆழ்த்திய நாள் இது.! என்ன காரணம்.?! - Seithipunal
Seithipunal


கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இலங்கை வரலாற்றில் இது ஒரு மோசமான நாள் என்று தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்த்து பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட்டார். இதில் கோத்தபய ராஜபக்ஷே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபராக வெற்றி பெற்றிருக்கின்றார். இந்த நாளானது இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நாள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோத்தபய ராஜபக்சே இலங்கை முன்னாள் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் ஆவார். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை நடைபெற்றது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தான்.

மேலும் அவர் ஒரு போர்க்குற்றவாளி என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி எழுந்த கண்டனக் குரல்களில் தமிழகத்தின் ஒரு குரலாக வைகோவின் குரலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko says this is worst day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->