தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநரை வெளியேற்ற வேண்டும் - வைகோ கடும் விமர்சனம்.!
Vaiko reply to governor RN Ravi
தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டு முதலீடு பயணம் குறித்து பேசிய ஆளுநருக்கு வைகோ கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஊட்டியில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர், வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டு முதலமைச்சரின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து பேசிய ஆளுநர் ரவி என் கருத்துக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் முதல் எதிரியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை இழிவு படுத்தி விஷத்தை கக்கியிருக்கிறார் ஆளுநர். மேலும் ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறார் என்றும் நாகலாந்து மாநிலத்தில் நிகழ்ந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Vaiko reply to governor RN Ravi