பிரச்சாரத்தில் சின்னத்தை மாற்றிய உதயநிதி - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தங்களுக்கான பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து காட்டூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிபில் ஈடுபட்டார். அப்போது, பெண் ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததையடுத்து, அந்த பெண்ணின் செல்போனை வாங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுடன் செல்பி எடுத்தார்.

இதைத்தொடர்ந்து பிரசாரத்தில் பேசிய அவர் தீப்பெட்டி சின்னம் என்று கூறுவதற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பேசியுள்ளார். 

அப்போது மக்கள் தீப்பெட்டி சின்னம் என்று கோஷமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உடனே மக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uthayanithi stalin election campaighn in trichy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->