அம்பத்தூரில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்; மூதாட்டியின் கைகளை கட்டி, கழுத்தை நெறித்துக்கொலை; நகைகள் கொள்ளை..! - Seithipunal
Seithipunal


அம்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை  மர்ம நபர்கள் சரமாரி தாக்கி கைகளை துணியால் கட்டி கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அதன் பின்னர் நகைகளை கொள்ளையடித்து ஆட்டோவில் தப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களை போலீசார் தேடி வருகின்ற நிலையில், சொத்துக்காக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்கானத்தம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள். அவருக்கு 70 வயது. கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு 06 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக கணவர்களுடன் வசித்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு பொன்னம்மாள் வீட்டிற்கு ஆட்டோவில் வந்த 02 பேர், திடீரென வீட்டுக்குள் புகுந்து, சிறிது நேரம் கழித்து அதே ஆட்டோவில் வேகமாக திரும்பியுள்ளனர். 

அத்துடன், அவர்கள் அந்த பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி வீட்டுக்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு பொன்னம்மாள் முகம், கண்களில் காயத்துடன் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவின்றி மயக்கநிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில் வந்த செவிலியர் பரிசோதித்துள்ளனர்.  ஆனால், அதற்கு முன்னரே மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி வீட்டிற்கு அடையாளம் தெரியாத 02 பேர் வந்ததாகவும், சிறிது நேரம் கழித்து அவர்கள் அதே ஆட்டோவில் கிளம்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன், மூதாட்டி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும், அவர் அணிந்திருந்த நகைகள் இல்லாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மூதாட்டிக்கு சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே ஒன்றரை கோடி மதிப்புள்ள நிலம் இருப்பதாகவும், சமீபத்தில் அந்த இடத்தை விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணம் பெற்று 06 மகள்களுக்கு தலா 05 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சொத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், கொலை செய்யப்பட்ட மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டும் இருந்ததால் கொலையில் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதா..? எனவும் போலீசாராருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unidentified individuals arriving in an auto rickshaw have strangled an elderly woman to death and looted her jewelry in Ambattur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->