எதிர்பாராத கொடூரம்: தஞ்சையில் பெண் தொழிலாளியின் உயிரைப் பறித்த பலாப்பழங்கள்...! பின்னணி என்ன...?
Unexpected cruelty Jackfruits claimed life female worker Thanjavur What background
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தின் போது பலாப்பழங்கள் தலையில் விழுந்து படுகாயமடைந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு (35).

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 22-ஆம் தேதி, மேல ஒட்டங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செடி, கொடிகளை அகற்றும் பணியில் சின்னப்பொண்ணு ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த பலா மரத்திலிருந்து எதிர்பாராத விதமாக 3 பலாப்பழங்கள் அவரது தலையில் பயங்கரமாக விழுந்தன. இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Unexpected cruelty Jackfruits claimed life female worker Thanjavur What background