உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு! உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

உதயநிதியின் பேச்சு, சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்தி உள்ளதாக கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பிரபலங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் இந்த கடிதம் எழுதியிருந்தனர்.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது, அரசு மற்றும் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என்றும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

மேலும், உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனில், அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என்றும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதோடு அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் உதயநிதி மறுத்துவிட்டார் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அப்போது உச்சநீதிமன்றம், முறையான வழிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் கிழமை முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhay sanatana speech SC Order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->