மஞ்சளை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாமா? - இது உடலுக்கு கேடா?
benefit of turmaric
நோய் கிருமிநாசினியாக பயன்படும் மஞ்சள் தூளை சுடுதண்ணீரில் கலந்து குடித்தால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* காலையில் வெறும் வயிற்றில் சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்னை குறையும்.
* மஞ்சள் தூள் கலந்த சுடுதண்ணீர் குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், பித்தப்பையில் பித்த உற்பத்திக்கு உதவுகிறது.
* வீக்கம் பிரச்சனை என்றால் புற்றுநோய், மூட்டுவலி பிரச்சனை ஏற்படும். இந்தப் பிரச்சனையை மஞ்சளில் உள்ள குர்குமின் தடுக்க உதவுகிறது.
* வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் சரியாகும்.
* மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று மற்றும் பாக்டீரியாவை தடுக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* உடலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கொழுப்பையும் குறைக்கின்றது. எடையைக் கட்டுப்படுத்தவும் மஞ்சள் உதவுகிறது.
* மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் முகப்பரு மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
* மஞ்சளை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் முழங்கால் வலி குறையும்.