அரிசியில் வண்டு, புழு இருக்கிறதா? - இதை மட்டும் செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


சுப நிகழ்ச்சி மற்றும் கோடை விடுமுறையில் மக்கள் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படி சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டில் இருக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களில் புழு மற்றும் வண்டுகள் மிதந்து கொண்டிருக்கும். அதனை எப்படி சரி செய்யலாம் என்று இங்குக் காண்போம்.

* அரிசியை ஈரமாக இல்லாமல் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். தரையில் வைக்கக் கூடாது. அரிசி மூட்டை நேரடி சூரிய ஒளியில் படக்கூடாது.

*அரிசியை டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம். சில நாட்கள் வெளியே செல்வதாக இருந்தால் அரிசியை இப்படி சேமித்து வைக்கலாம்.

* இதேபோல், அரிசி கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் உள்ளன, ஆனால் அவற்றை சேர்ப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக வேப்ப இலை, பிரியாணி இலைகளை சேர்க்கலாம். 

* அரிசியில் பூண்டு மற்றும் மிளகை ஒரு டப்பாவில் போட்டு சேர்த்துக் கொண்டால் சில மாதங்கள் வரை இருக்கும். 

* ஒரு அரிசி மூட்டையில் வேப்பிலையை தண்டுடன் சேர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tips of insects and beetles remove in rice


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->