பெண்ணின் சடலத்துடன் சிக்கிய வாலிபர்கள் - திருப்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் அருண் ஸ்டாலின் விஜய் பிரின்சி என்ற தம்பதியினர் பணிபுரிந்து வந்தனர். இதே மில்லில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துரை சேர்ந்த திவாகர் என்பவர் பணியாற்றினார். இந்த நிலையில், பிரின்சிக்கும் அதே கம்பெனியில் பணியாற்றி வந்த திவாகருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. 

இதுகுறித்து திவாகரின் மனைவிக்கு தெரியவந்தால், திவாகர் கடந்த ஒரு மாதமாக பிரின்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து பிரின்சி திவாகரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர், பிரின்சியை கொலை செய்ய முடிவு செய்து, உறவினர் இந்திரகுமார் என்பவரை பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வரச்சொல்லியதுடன், பல்லடம் பகுதிக்கு பிரின்சியையும் வரவழைத்துள்ளார்.

அதன் படி அங்கு வந்த பிரின்சியிடம், காரில் பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், கண்ணை மூடிக்கொண்டால் அந்த பரிசை சஸ்பென்ஸாக கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியில், பிரின்சி கண்ணை மூடிய சமயம், இருவரும் காரில் மறைத்து வைத்திருந்த லைலான் கயிரால் பிரின்சியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் பிரின்சியின் உடலை பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் செல்லும் வழியில் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் புதைப்பதற்கு காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனே அவர்கள், அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் படி விரைந்து வந்த போலீசார், சடலமாக இருந்த பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாக கருதப்பட்ட திவாகர் அவரது உறவினர் இந்திரகுமார் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for murder in tirupur


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->