முதல்வர் விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூராக பேசிய திமுக ஐடி விங் நிர்வாகி; மாற்றுத்திறனாளி என்பதால் ஜாமீனில் விடுவிப்பு..!
DMK IT wing executive arrested for defaming Chief Minister Vijay on social media released on bail
முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பரளியைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை என்கிற தங்கமணி (41). மாற்றுத் திறனாளியான இவர் திமுக வார்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் வந்தபோது அவர் குறித்து இழிவாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் தவெக குளித்தலை நகரச் செயலாளர் விஜய் புகார் கொடுத்திருந்தார். அதன்படி, குளித்தலை போலீஸார் தங்கமணி மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இன்று (ஜூலை 13-ஆம் தேதி) கைது செய்து குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை எம்எல்ஏ அ.சந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை போலீஸார் தங்கமணியை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தங்கமணி மாற்றுத்திறனாளி என்பதால், நீதிபதி ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளார்.
English Summary
DMK IT wing executive arrested for defaming Chief Minister Vijay on social media released on bail