தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அ.அருண் திடீர் மாற்றம்; சி.மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, தவெக அரசு அமைந்தவுடனேயே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராக இருந்த அ.அருண் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் அ.அருண் ஐபிஎஸ், தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலர் மணிவாசன் இடம்மாற்றம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Anti Corruption Department Director A Arun suddenly transferred


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->