அரியலூரில் பரபரப்பு -  பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த அபிமணி என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி உடற்கல்வி ஆசிரியரான ஹெரால்டு சகாயராஜ் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் சகாயராஜ் அந்த மாணவியை விசாரிப்பது போல் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். 

ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்க தாமதப்படுத்தியதால் சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன் படி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for harassment in ariyalur


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->