வரையாட்டின் கொம்பை பிடித்து துன்புறுத்திய 2 இளைஞர்கள் கைது..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சி ஆனைமலை குளிகை காப்பக பங்கு வனப்பகுதி உட்பட்ட டாப்ஸ்லிப் மற்றும் வால்பாறை பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு அதிக அளவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பணிகள் வருவது வழக்கம். 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அதிக அளவில் காணப்படுகிறது. அரிய விலங்கான வரையாட்டை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே வால்பாறைக்கு வரும் சுற்றுலா வரும் பயணிகள் சாது விலங்கான வரையாட்டின் கொம்புகளை பிடித்து புகைப்படம் எடுப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குனர் ராமசுப்பிரமணியனிடம் உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர். அதன் படி, வனவிலங்குகளை அச்சுறுத்தி புகைப்படங்கள் எடுத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்து இருந்தார்.

அந்த வகையில் பொள்ளாச்சி வன சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை சாலையில் நின்று கொண்டிருந்த வரையாடு ஒன்றின் கொம்புகளை பிடித்து இரண்டு சுற்றுலாப் பயணிகள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இளைஞர்களின் செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த சில்டன் ஜோபி மற்றும் ஆபிரகாம் என்பது தெரிய வந்தது.

அவர்கள் இருவர் மீதும் வன உயிரியல் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுபோன்று வனவிலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for harassing the horn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->