ஓசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.41 லட்​சம் பணம் பறி​முதல்..! - Seithipunal
Seithipunal


ஓசூர் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.41 லட்​சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்​டத்தில் உள்ள ஓசூர் ஜுஜு​வாடி வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலக சோதனைச் சாவடி​யில் வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் பெறு​வ​தாக, லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸாருக்​குப் புகார்​கள் வந்​தன. அந்தப் புகாரின் படி டிஎஸ்பி நாக​ராஜ் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று அதி​காலை ஜூஜு​வாடி சோதனைச் சாவடி​யில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அங்கு கணக்​கில் வராத ரூ.2.41 லட்​சம் பணத்தை பறி​முதல் செய்தனர். அதன் பின்னர் போலீ​ஸார், அங்கு பணி​யில் இருந்த வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலரின் உதவி​யாளர் காயத்ரி மற்​றும் ஊழியர்​களிடம் பணம் குறித்து விசா​ரணை மேற்​கொண்டு வருகின்றனர்​. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two lakhs money seized in hosur checking post


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->