#ஈரோடு || எஸ்.பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை ஜோர்.! 2 பேரை மடக்கி பிடித்த போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கஞ்சா புழக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக போலீசார் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

தற்பொழுது வரை கஞ்சா ஆப்பரேஷன் 1.0 தொடங்கி 4.0 வரை சென்ற நிலையிலும் தமிழகத்தில் கஞ்சா விற்பனையானது குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பு சோதனை பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த சில நபர்கள் தப்பியோடினர். இதில் சந்தோஷ்ராஜ் மற்றும் சண்முகம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two arrested for selling ganja near Erode SP office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->