அய்யா நாம ஜெயிச்சிட்டோம்... டாக்டர் இராமதாசுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவிக்கும் வன்னியர்கள்.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்திற்கு எம்.பி.சி பிரிவில் 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியின் போது எம்.பி.சி பிரிவில் வன்னியர் என்ற உள் பிரிவு ஒதுக்கப்பட்டு, 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்க உதவி செய்தனர். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தலைவர் ஜி.கே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பாட்டாளி, வன்னிய சொந்தங்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்து, சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முறையிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், நேற்று இரவு எம்.பி.சி வன்னியர் பிரிவு அரசு பணிகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சேர்க்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

தற்போது மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், எம்.பி.சி வன்னியர் பிரிவு இணைக்கப்பட்டது. மருத்துவர் இராமதாஸின் 42 வருட தொடர் போராட்டத்தால் வன்னியர் சமூகம் முன்னேற அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் வன்னியர்கள் எம்.பி.சி வி பிரிவு மூலமாக விண்ணப்பிக்கலாம். இதனைப்போன்று அரசு வேலைவாய்ப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவர் இராமதாஸின் 42 வருட உழைப்பும், வலிகளும், இழப்புகளும், வேதனைகளும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை பெற்று கொடுத்துள்ளது. பாட்டாளிகளால் சமூக நீதி காவலர் என்று போற்றப்படும் மருத்துவர் இராமதாஸின் உழைப்பு பாட்டாளி மற்றும் வன்னிய சொந்தங்களின் ஒத்துழைப்பு, அரசின் நல் முடிவால் நிறைவேறியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பாட்டாளிகள் ட்விட்டரில் #ThankYouDrAyya என்ற ஹாஷ்டேக்கை பதிவு செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Handling Vanniyars Trending about to Thanks for Dr Ramadoss ThankYouDrAyya Hashtag


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->