கடலூரில் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு மனு.! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவர், 2-வது கட்டமாக நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டர். 

இந்த நிலையில், நடிகர் விஜய் வருகிற 11-ந் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்தச் பிரச்சாரத்தில் விஜய் பேசுவதற்காக கடலூரில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- "தமிழகம் முழுவதும் வெற்றி பேரணியில் தமிழ்நாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார். கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பகுதியில் மதியம் 2 மணிக்கு தலைவர் விஜய் மக்களை சந்தித்து பேச உள்ளார். 

அப்போது ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆகையால் 2 இடங்களில் விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk secretaries petition to cuddalore sp for tvk election campaign


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->