மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா - தலைவர் விஜய் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கைகளையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே விஜய் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது, எந்த சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.

இந்த நிலையில், மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் விழா நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். இதையடுத்து, மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk leader vijay participate Pandal foot planting ceremony in vilupuram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->