அனைவரையும் கவர வைக்கும் விஜய் மாநாட்டின் கட்-அவுட்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன்படி, அந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.

இந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள விஜய்யின் பேனர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது, மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் அஞ்சலை அம்மாள் ஆகியோரது பேனர்கள் இடம் பெற்றுள்ளது.

மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற பேனர்களும் உள்ளன. மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையுடன் பணிகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

அதன் பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்' மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk conference bannars viral


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->