தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு கடுமையான நிபந்தனைகள் - உயர்நீதிமன்றத்தில் மனு.!!
tvk case file police Strict conditions ti tvk leader vijay election campaign
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்தினார்.
அப்போது காவல்துறை தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக தவெகவினர் சார்பில் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க.வின் வழக்கில், தங்களையும் சேர்க்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விட த.வெ.க.விற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tvk case file police Strict conditions ti tvk leader vijay election campaign