கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்டு தவெக மனு.!! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தமிழக வெற்றிக்கழகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அணியினர் மதுரை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி தண்டபாணியிடம் முறையிடுவதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று சென்றனர்.

அங்கு அவரிடம், ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் விபத்து போல தெரியவில்லை. அது திட்டமிட்ட சதி போலவே தெரிகிறது.
பிரசாரத்தின்போது கற்கள் வீசப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். ஆகவே, இதுதொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். 

கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கvum, இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட நீதிபதி, ‘சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கு நாளை (அதாவது இன்று) மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்படுகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு தற்போது தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk case file for cbi investigation in karoor incident


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->