பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
TTV Dhinakaran Say milk farmers protest tn
பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பால்நிறுத்தப்போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது" என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran Say milk farmers protest tn