டிடிவி தினகரனின் அமலாக்கத்துறை வழக்கு! உயர்நீதிமன்றம் கிடுக்குப்புடி! - Seithipunal
Seithipunal



1995ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, சுமார் 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை சட்டவிரோதமாக மாற்றியதாக டிடிவி மீது புகார் எழுந்தது.

மேலும், இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணை முடிவில், இங்கிலாந்து நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக இந்த பணத்தை மாற்றியதாக கூறி டிடிவி தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்திருந்தது.

இது சம்மந்தமான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,டிடிவி தினகரனுக்கு விதித்த அபராதத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, அமலாக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அமலாக்க துறையை கேள்வி எழுப்பிய அடுத்த கணமே, அபராதத்தை கட்டுவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று டிடிவி தினகரனுக்கும் உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த போதும்m அதனை டிடிவி தினகரன் செலுத்தவில்லை என்று தெரிவித்தது.

மேலும் அபராதம் செலுத்தாததால் திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்க நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.

இதற்க்கு டிடிவி தினகரன் தரப்பில், தனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக வாதம் வைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran AMMK ED Case Chennai HC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->