டி.டி.வி. தினகரனின் குற்றச்சாட்டு! ஒரே வரியில் பதில் சொன்ன நயினார் நாகேந்திரன்!
TTV Dhinakaran accusation Nayinar Nagendran gave a one line reply
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:“நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என நான் சொல்லவில்லை. அந்த கூற்றை அண்ணாமலைதான் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது நான் அல்ல.
அதேபோல், கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகுவதற்கு நான் காரணம் என டிடிவி தினகரன் கூறியிருப்பது புரியவில்லை. தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை.
தொடக்க காலம் முதலே அ.தி.மு.க. எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், செங்கோட்டையனை எங்கள் கட்சியில் அழைப்பது நாகரிகமாக இருக்காது,” என்று அவர் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்துகள், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியைக் குறித்த அரசியல் விவாதங்களுக்கு மேலும் வித்திட்டுள்ளது.
English Summary
TTV Dhinakaran accusation Nayinar Nagendran gave a one line reply