'என்னோட பவர் தெரியாமல் விளையாடுறீங்க'.. செய்தி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த TTF வாசன்.! - Seithipunal
Seithipunal


பைக்கில் அதிவேகமாக சென்று வழக்குப்பதிவுக்கு செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன் செய்தி தொலைகாட்சிகளுக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிக்டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்துவை தனது பைக்கில் உட்கார வைத்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டுருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து தவறான முன்னுதாரணமாக வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செயது தேடி வந்தனர். இந்த நிலையில் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார்.

அதன்பின்னர் 2 உத்தரவாதம் அளித்த பின் மாலை அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப் வாசன் ஜாமீன் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று டிடிஎஃப் வாசன் செய்தி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "டிடிஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல்ஸ் விளையாட்டிட்டு இருக்கீங்க.. அப்பிடீனு கேட்க தோணுது. ஆனால், கேட்க மாட்டேன். நீயூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது; உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது. உங்களோட லிமிட்டலையே இருங்க. என்னைப் பற்றி போலியான செய்திகளை பரப்ப வேண்டாம். டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க. நான் மிரட்டல. பிரபல யூடியூபர்களான மதன், இர்பான் என எல்லோரையும் செஞ்சிட்டாங்க. அடுத்து நீங்களா கூட இருக்கலாம். நாம எவ்வளோ கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கோம்னு அவங்களுக்குத் தெரியாது" என செய்தி தொலைக்காட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF Vasan warning to news channels


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->