வேங்கை வயல் விவகாரம் - 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பரிசோதனை மேற்கொண்ட ஐந்து சிறார்கள் உள்பட 31 பேரில், பத்து பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கான சம்மனை சிபிசிஐடி போலீசார் கடந்த 25-ம் தேதி அனுப்பினர்.

மேலும், அவர்கள் பத்து பேரும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சம்மன் குறித்து அவர்களின் கருத்துகளை தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truth test on 10 people for putukottai vengaivayal issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->