வைகோ-வின் வாரிசு அரசியல்! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த திருப்பூர் துரைசாமி! - Seithipunal
Seithipunal


திமுகவில் கருணாநிதிக்கு பின் அவரின் மகன் ஸ்டாலின் (தற்போதைய திமுக தலைவர், தமிழக முதல்வர்) முன்னிலைப்படுவதை வாரிசு அரசியல் என்று விமர்சித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியை தொடங்கியவர் வைகோ.

அப்படி பட்டவரே தனது வாரிசு துரை வைகோவை கட்சியில் முன்னிலை படுத்தி, அடுத்த மதிமுக தலைவர் என் மகன் தான் என்று சொல்லாமல் செய்து காட்டி வருவது, அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாம். இனி கட்சி தேறாது என்று, வைகோவிற்கு, மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

துரைசாமி எழுதிய கடிதத்திற்கு வைகோ பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்வைக்காத நிலையில், "சிலவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம். ஜனநாயக முறைப்படி நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.

முன்நடஹ்க கடந்த மாதம், "நான் திமுக உட்பட வேறு எந்த கட்சியிலும் கட்டாயம் இணைய மாட்டேன். அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்" என திருப்பூர் துரைசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tripur Duraisamy Quit MDMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->