திருமணமாகாத பெண் போலீஸ் ஏட்டு தற்கொலையா.?! சென்னை ரயிலில் அடிபட்டு மரணம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் 42 வயதான ஸ்ரீபிரியா என்பவர் வசித்து வந்தார். ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் லேட்டாக இவர் பணிபுரிந்து வந்த நிலையில், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு அக்கா ஆகியோர் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பிரியாவின் தந்தை இறந்து விட அவரது தாயும் இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

பிரியா மட்டும் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் ஆவடி ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை பார்க் செய்துள்ளார். பின்னர் நான்காவது நடைமேடையில் நடந்து வந்து தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ஸ்ரீ பிரியா மீது மோதியதில் அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார்.

இது பற்றி அறிந்த காவல்துறையினர் வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ பிரியா இறந்து போனது ஆக்சிடென்ட்டா அல்லது அவர் தானே தற்கொலை முயற்சி செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Triplicant Lady Police suicide


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->