நெருங்கும் தேர்தல்: பறக்கும் படை குழுவினரிடம் சிக்கிய கைத்தறி துண்டுகள்!
Trichy linen pieces seized
திருச்சி, கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரினை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 300 கைத்தறி துண்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் காரை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் வயது 24 என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இதனை அடுத்து அதிகாரிகள் பிரசாந்திடம் விசாரணை நடத்தினர். பிறகு உரிய ஆவணங்கள் இல்லாததால் 300 கைத்தறி துண்டுகளை பறிமுதல் செய்து பறக்கும் படை குழுவினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
English Summary
Trichy linen pieces seized