''நீ கேப்''புடன் விமான நிலையத்திற்கு வந்த பயணி! சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
Trichy Airport gold sized
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்து நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் நீ கேப் அணிந்திருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது நீ கேப்பில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலியை மறைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 1.424 கிலோ கிராம் எனவும் இதன் விலை 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரம் எனவும் சுகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Trichy Airport gold sized