நெருப்பைக் கடவுளாக வழங்கும் பழங்குடியினர் - நீலகிரியில் வினோத திருவிழா.! - Seithipunal
Seithipunal


பண்டைய பழங்குடியின மக்களில் ஒருவர் கோத்தர் இன மக்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் அதாவது, கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, திருச்சிக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, சோலூர் கோக்கால், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகின்றனர். 

இந்த கோத்தர் இன மொழியில் ஊடல் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாதத்தில், அமாவாசைக்கு அடுத்து தெரியும் முதல் பிறையே இவர்களது வருட பிறப்பாக இருக்கும். அதனால், அமாவாசையிலிருந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் விரதம் இருந்து தனித்தனியாக இறைவனைப் வேண்டுகின்றனர். 

இறைவனுக்கு பொங்கல் வைப்பதற்கான மண்ணை, பெண்கள் எடுத்து வந்து அவர்கள் கைகளாலேயே மண்பாண்டங்கள் செய்து அதன் மூலம் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். பின்னர் கல்தூக்கும் நிகழ்வு நடைபெறும். அதாவது, கல் எந்த அளவுக்கு மேலே ஏறுகிறதோ அந்த அளவுக்கு மக்களின் முன்னேற்றம் இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில், அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து நடனம் ஆடி நெருப்பை மூட்டி தெய்வமாக வழிபட்டனர். உருவ வழிபாடுகளை தவிர்த்து, நெருப்பை மட்டுமே இவர்கள் கடவுளாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tribes peoples pray fire god in neelagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->