உடன்பாடு எட்டாவிட்டால் போராட்டம் வெடிக்கும்.!! போக்குவரத்து தொழிற்லாளர் சங்கங்கள் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 15ஆவது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளருக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரருக்கு வேலைவாய்ப்பு, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்த போராட்ட நோட்டீஸ் வழங்கியது போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள்.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் அரசு ஈடுபடும் என தொழிலாளர் நலத் துறை அறிவித்த நிலையில் நாளை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் 23 தொழிற்சங்கங்களும், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது வேலை நிறுத்த போராட்ட நோட்டீஸ் வரும் ஜனவரி 4-ம் தேதி உடன் முடிவு வரையுள்ள நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தியில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport unions protest if no agreement reached


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->