பேருந்துகளை முற்றுகையிட்டால்.. தொழிற்சங்கத்தினருக்கு எச்சரிக்கை விடும் போக்குவரத்து துறை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வப்போது, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகளை முற்றுகையிடுவதும், ஓட்டுநர் நடத்துனர்களை தக்க முயல்வதுமாக அத்துமீறி வருகின்றனர்.  

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதால், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ, சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், எந்த பாரபட்சமும் இல்லாமல் துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport depat warned employees strike


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->