ரெயில் பயணிகளே உஷார்! சென்னையில் செல்போன் திருடர்கள் இருவர் கைது...! - அச்சுறுத்தும் ரெயில் நிலைய கொள்ளைகள்...! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும் ரெயில்வே காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று அந்த ரெயில் நிலையத்தில் பயணம் மேற்கொண்டிருந்த அபிஷேக் என்ற நபரின் செல்போன் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக், உடனடியாக ரெயில்வே காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில் செல்போனை அபகரித்துச் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவரும் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவலர்கள், இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போனும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலும் ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train passengers beware Two cell phone thieves arrested Chennai Threatening train station robberies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->