தெருக்களில் நடப்பதே மரண பயம்...! - திருவள்ளூரில் 18 பேரை கடித்துக் குதறிய தெருநாய்...!
Walking streets mortal fear Stray dog bites 18 people Thiruvallur
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் வெறித்தனமாக சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், நகராட்சி பெண் தூய்மை பணியாளர் உட்பட 18 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாயின் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 3 பெண்கள் உட்பட 18 பேரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலருக்கு உடலில் பல இடங்களில் கடியால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தால் காக்களூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கடும் பதற்றமும், பாதுகாப்பு அச்சமும் நிலவுகிறது.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்லவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தெருநாய் தாக்குதல்கள் பொதுசுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Walking streets mortal fear Stray dog bites 18 people Thiruvallur