டிசம்பர் 26 முதல் ரெயில் கட்டணம் உயர்வு...! - பயணிகளுக்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு
Train fares increase from December 26 Important announcement from railways passengers
வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரெயில் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம், குறிப்பிட்ட தூர பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, சாதாரண வகுப்பு ரெயில்களில் 215 கி.மீ.க்கு மேல் பயணம் செய்வோருக்கு, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும், 500 கிலோ மீட்டர் வரை செல்லும் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்.இந்த கட்டண உயர்வின் மூலம், ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரெயில்வே மதிப்பீடு செய்துள்ளது.
இந்த புதிய டிக்கெட் கட்டணங்கள் டிசம்பர் 26 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.இதற்கிடையில், பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், புறநகர் ரெயில் சேவைகளில் எந்தவித கட்டண உயர்வும் இல்லை என்றும், சீசன் டிக்கெட் பயணிகளுக்கும் கட்டண மாற்றம் இல்லை என்றும் ரெயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சாதாரண வகுப்பில் 215 கி.மீ. வரை பயணிக்கும் பயணிகளுக்கு கட்டண உயர்வு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டண திருத்தம், ரெயில்வே வருவாயை உயர்த்துவதுடன், குறைந்த தூர பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Train fares increase from December 26 Important announcement from railways passengers