சிறை சுவருக்குள் நடந்த சோகம்: போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி திடீர் மரணம்...! நடந்தது என்ன...?
Tragedy inside prison walls prisoner convicted POCSO case dies suddenly What happened
கோவை மாவட்டம் காரமடை அருகே பொன்னிபாளையம், சக்தி நகரைச் சேர்ந்த 64 வயதான ரங்கசாமி, போக்சோ வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வந்த அவருக்கு, நேற்று முன்தினம் மதிய வேளையில் திடீரென கடுமையான மார்வலி ஏற்பட்டது.வலி அதிகரித்து துடித்த ரங்கசாமியை உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நிலைமை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் அது பலனளிக்கவில்லை. சிகிச்சை நடுவே ரங்கசாமி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy inside prison walls prisoner convicted POCSO case dies suddenly What happened