கும்பகோணத்தில் பயங்கரம்: போன் சண்டையால் 6 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி!
Tragedy in Kumbakonam Mother Kills Son After Domestic Dispute
கும்பகோணம் கணபதி நகரில் குடும்பத் தகராறு காரணமாக 6 வயது மகனைத் தாய் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
:சரண்யா (30) மற்றும் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரியும் வினோத்குமார் (37) தம்பதியினர், கடந்த 4 ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகன் சாய் (6), அப்பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.
நடந்தது என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்குமாருக்கும் சரண்யாவிற்கும் இடையே தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான சரண்யா, வெள்ளிக்கிழமை இரவு தனது சுடிதார் துப்பட்டாவால் மகன் சாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், தனது கை நரம்புகளைக் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மீட்புப் பணிகள்:
தான் செய்த காரியத்தை உறவினர்களுக்குச் செல்போன் மூலம் சரண்யா தெரிவிக்கவே, அவர்கள் உடனடியாகப் பட்டீஸ்வரம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த சரண்யாவைக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்பச் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்போது தற்கொலை முடிவைத் தவிர்த்து, அரசின் இலவச உதவி மையங்களை (எண்: 104) அணுகுவது இத்தகைய பிஞ்சுயிர்கள் பறிபோவதைத் தடுக்கும்.
English Summary
Tragedy in Kumbakonam Mother Kills Son After Domestic Dispute