கும்பகோணம்: மது போதையில் செல்போன் பேச மொட்டை மாடி சென்ற இளைஞர்! உயிரை விட்ட பரிதாப சம்பவம்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சார்ந்த  சரக்கு வாகன ஓட்டுனரான ரகுநாத் என்பவர்  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள  வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சார்ந்தவர் ரகுநாத். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி  சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு அவரது பெற்றோர்  வரன் பார்த்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் திடீரென வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

காவல்துறையின் விசாரணையில்  நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருந்த ரகுநாத் செல்போன் பேசுவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது தவறுதலாக கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tragedy happened to the young man at a friends liquor party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->