குடும்பப் பிரச்சினையால் நேர்ந்த கொடூரம்...! - தூத்துக்குடி அருகே பூச்சி மருந்து குடித்த 20 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாப உயிரிழப்பு...!
tragedy caused by family dispute 20 year old youth who drank pesticide near Thoothukudi died without any treatment
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினைகளால் கடுமையான மனஅழுத்தத்தில் தவித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மன உளைச்சலில் சிக்கியிருந்த அவர், வாழ்க்கையில் விரக்தியடைந்து சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த சதீஷ்குமாரை அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரைக் காப்பாற்ற போராடிய சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக சாயர்புரம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்பிற்கான முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tragedy caused by family dispute 20 year old youth who drank pesticide near Thoothukudi died without any treatment