அரக்கோணத்தில் சோகம்...! ரூ.20 ஆயிரத்திற்காகத் தடுக்கப்பட்ட பிரசவம்...! - பிறந்த குழந்தையுடன் தாய் உயிரிழந்த அதிர்ச்சிப் பின்னணி...! - Seithipunal
Seithipunal


காஞ்சீபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன், தனது மனைவி தேன்மொழியுடன் அரக்கோணம் சாலையோர பகுதியில் தங்கி விறகு வியாபாரி ஒருவரிடம் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருளர் சமூகத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர், வேலைக்காக முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

தேன்மொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பெற்ற முன்பணத்தை திருப்பி செலுத்தாமல் வேலை செய்யும் இடத்தை விட்டு வெளியேறக்கூடாது என விறகு வியாபாரி அவர்களை தடுத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில், தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில், தார்ப்பாய் கூடாரத்திலேயே சிலர் அவருக்கு பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.கூடாரத்திலேயே நடைபெற்ற பிரசவத்தில், பிறந்த குழந்தையும் தேன்மொழியும் பரிதாபமாக உயிரிழந்தனர். எதிர்பாராத இந்த துயர சம்பவத்தால் அங்கு தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மருத்துவ உதவி உரிய நேரத்தில் கிடைக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதற்கிடையே, தேன்மொழியின் உயிரிழப்பை இயற்கை மரணம் எனக்கூறி, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேன்மொழி மற்றும் அவரது குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம், வேலைக்காக வழங்கப்பட்ட முன்பணம் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்காத நிலையில் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Arakkonam Delivery prevented 20 thousand Shocking background mother death with her newborn baby


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->